கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் சற்று முன் ‘ஜப்பான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்தியின் அட்டகாசமாக லுக் கொண்ட இந்த போஸ்டரை கார்த்தியின் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் மேலும் புஷ்பா படத்தில் நடித்த சுனில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Excited to start this journey of a quirky guy! #Japan - Made in India.#JapanFirstLook pic.twitter.com/gBStwdetkY
— Karthi (@Karthi_Offl) November 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments