ஒரு மாதம் கூட ஆகவில்லை , அதற்குள் ஓடிடி ரிலீஸா? கார்த்தியின் அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பு பெற்றது என்பதும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கூட ஒரு சில திரையரங்குகளில் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் ஓடி வருகிறது. இந்த நிலையில் ’சர்தார்’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில் நவம்பர் 18ஆம் தேதி ’சர்தார்’ படம் ஆஹா ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
திரையரங்குகளில் வெளியான ஒரு திரைப்படம் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்குள் ’சர்தார்’ ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.
Ithu trailer-nu nenachingala???Sardar-eh release panna vanthruka Code RED..??
— Prince Pictures (@Prince_Pictures) November 11, 2022
Wait for the action to begin | #SardarOnAHA - Premieres Nov 18!@Karthi_Offl @Prince_Pictures @ahaTamil @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @ActressLaila @RaashiiKhanna @rajishavijayan pic.twitter.com/sGp6qOuf51
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com