'பொன்னியின் செல்வன்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த கார்த்தி!

  • IndiaGlitz, [Thursday,September 16 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக அறிவித்தனர். இதனை அடுத்து தற்போது கார்த்தியும் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசர் ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ’பொன்னியின் செல்வன்’திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் என்ற ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து உள்ளார் என்பதும், அவரது சகோதரி குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, நடிகர் கார்த்தி இந்த படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் முக்கிய கேரக்டர்களில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.