சிவகுமார் செல்பி விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

கடந்த சில மாதங்களுக்கு முன் செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயன்றபோது நடிகர் சிவகுமார் அவருடைய செல்போனை தட்டிவிட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனையடுத்து இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்ட சிவகுமார், அந்த இளைஞருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொள்ள சென்றபோதும் செல்பி வீடியோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இதுகுறித்து நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியபோது, 'கையில் போன் இருந்தால் யாருடைய முகத்தின் முன் போனை நீட்டி செல்பி எடுப்பது என்பது அநாகரீகமானது. செல்பியோ புகைப்படமோ எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற நாகரீகத்தை நாம் இன்னும் யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம்.

இதுவொரு சாதாரண விஷயம். இந்த விஷயத்திற்காக மீடூ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்பதையும் கார்த்தி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

More News

உலகை வியக்க வைத்த இசை: 12 வயது சென்னை சிறுவரின் சாதனை

இசை குறித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தற்போது பல தொலைக்காட்சிகளில் இடம்பெற்று வருவது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இசை திறமையுள்ள சிறுவர், சிறுமியர்கள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றனர்

தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து மோடி அரசு எடுத்த மூன்று முக்கிய முடிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

அடுத்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்: வீரமரணம் அடைந்த வீரரின் தந்தை அறிவிப்பு

நேற்று பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்றின் மனிதவெடிகுண்டு தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சி,ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது

கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், 'கஜினி' உள்பட ஒருசில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

காஷ்மீர் தாக்குதல்: கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

காஷ்மீரில் மனிதவெடிகுண்டு நடத்திய பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.