close
Choose your channels

கார்த்தியின் அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் திட்டம்!

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தீபாவளி திருநாளில் விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் படத்துடன் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து, அடுத்ததாக மேலும் இரண்டு பிரபல நடிகர்களின் படங்களுடன் கார்த்தியின் அடுத்த இரண்டு படங்கள் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக வரும் கிறிஸ்துமஸ் நாளில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதே தேதியில் கார்த்தி நடித்த அடுத்த படம் வெளியாக உள்ளதாக தெரிகிறது. ’பாபநாசம்’ இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோதிகா மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் வரும் பொங்கல் திருநாளில் ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இதே நாளில் கார்த்தியின் இன்னொரு படமான ’சுல்தான் என்ற படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார். கார்த்தி நடித்த இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயம் இரண்டு படங்களும் பெரிய படங்களுடன் மோதினாலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment