முடிவடையும் நிலையில் 'விருமன்' படப்பிடிப்பு: கார்த்தியின் அடுத்த திட்டம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மதுரை, தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்த கட்டமாக ’சர்தார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கார்த்தி கலந்துகொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்றது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தி இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், ராஷி கண்ணா மற்றும் ரஷிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.