வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?
- IndiaGlitz, [Wednesday,December 25 2019]
கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கைதி’ மற்றும் ’தம்பி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது
இந்த நிலையில் கார்த்தி தற்போது பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கார்த்தி நடித்த ’தம்பி’ படத்துடன் வெளிவந்த ’ஹீரோ’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய இரண்டு வெற்றி படங்களை தொடர்ச்சியாக இயக்கிய பிஎஸ் மித்ரன் கார்த்தியுடன் இணையும் திரைப்படத்தையும் வெற்றி படமாக்கிவிட்டால் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இயக்குனர் பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது