கார்த்தியின் அடுத்த பட டைட்டில்.. நாயகி உள்பட முழு விபரங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ’விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘ஜப்பான்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘ஜப்பான்’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க உள்ளார்.
இன்றைய பூஜை நிகழ்ச்சியில் கார்த்தி, அனு இமானுவேல், ராஜூமுருகன், ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Delighted to announce that @Karthi_Offl starrer #Japan pooja happened today, need all your love ??#ஜப்பான் @Dir_Rajumurugan @gvprakash @ItsAnuEmmanuel @vijaymilton @prabhu_sr pic.twitter.com/HOxLWeI1UO
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments