மைசூர் காட்டில் ஆக்சன் காட்சிகள்: கார்த்தியின் அடுத்த பட அப்டேட்!
- IndiaGlitz, [Wednesday,March 09 2022]
நடிகர் கார்த்தி நடித்த ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’விருமன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான ’சர்தார்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள காட்டில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும் தற்போது மைசூர் காட்டில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் கார்த்திக் இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் தந்தை கேரக்டரில் ஆக்ஷன் காட்சிகள் தான் தற்போது மைசூரில் நடைபெற்று வருகிறது என்றும் இந்த காட்சிகளின் ஸ்டண்ட் இயக்குனராக திலிப் சுப்புராயன் பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முடிவடையும் என்றும் அதனை அடுத்து ஒரு சில மாதங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் சிம்ரன் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் ரஜிஷா விஜயன், முனீஸ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.