கார்த்தியின் அடுத்த படம் கேங்க்ஸ்டர் கதையா? இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,December 18 2024]

கார்த்தி நடித்த 'மெய்யழகன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் ‘வா வாத்தியாரே; மற்றும் ’சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கைதி 2’ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், ’கைதி 2’ படத்திற்கு முன்பே அவர் ஒரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கியவரும், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான தமிழ் என்பவரின் இயக்கத்தில் தான் கார்த்தி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்தியின் 29வது படமாக அமையும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், கடந்த 60களில் ராமேஸ்வரம் பின்புலத்தைக் கொண்ட ஒரு கதை அம்சம் என்றும், இது முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை முடித்த பின்னர் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கைதி 2 ’ படத்தில் கார்த்தி இணைவார் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் தற்போது ரஜினியின் ’கூலி’ படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ’கைதி 2’ படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருச்செந்தூர் முருகன் அருளால் வாழ்க்கை மாற்றும் ரகசியங்கள் பற்றி ALP ஜோதிடர் சம்பத் சொல்கிறார்

ஆன்மிகக்ளிட்ஸ் சேனலில் ALP சம்பத் அவர்கள் அளித்த பேட்டியில், திருச்செந்தூர் முருகன் அருள் பற்றிய ஆழமான புரிதலைப் பகிர்ந்துள்ளார்.

💰வீட்டில் பணம் தங்க மற்றும் லட்சுமி கடாட்சம் பெருக அசோக் அஸ்ட்ரோ சொல்லும் ரகசியம் !

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், அஷோக் அஸ்ட்ரோ அவர்கள், பிரம்ம முகூர்த்தம் மற்றும் நவபாஷாணம் போன்ற ஆன்மீகக் கருத்துகளை விளக்கியுள்ளார்.

18 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது: 'விடுதலை 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மலையாள திரையுலகில் ஒரு புதுவரவு.. 'ருதிரம்' படத்தில் அசத்தலான நடிப்பு..!

மலையாளத் திரைப்படமான ருதிரத்தில் ஜேஸன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்திழுக்கும் புதுவரவாக மாறியுள்ளார் பி கே பாபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் 4 கேரக்டர்கள் மாற்றம்.. என்ன நடக்குது 'எதிர்நீச்சல் 2' சீரியலில்?

'எதிர்நீச்சல் 2' சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த சீரியலில் நான்கு கேரக்டர்களில் நடித்த நட்சத்திரங்கள் மாறி உள்ளதாக கூறப்படுகிறது.