கார்த்தியின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,February 28 2016]

நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் வினோத் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்'

வினோத்தின் அடுத்த பட ஹீரோ 'பருத்திவீரன்' கார்த்தி என்ற தகவல் கிடைத்துள்ளது. கார்த்தி தற்போது 'தோழா' படத்தை முடித்துவிட்டு கோகுல் இயக்கி வரும் 'காஷ்மோரா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி அடுத்ததாக 'சதுரங்க வேட்டை' படத்தில் இணைவார் என தெரிகிறது. சதுரங்க வேட்டை போலவே இந்த படமும் ஒரு பொருளாதார க்ரைம் சப்ஜெக்ட் என்று கூறப்படுகிறது.