கார்த்தியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

கடந்த ஆண்டு கார்த்தி நடித்த ’பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ’சர்தார்’ ஆகிய மூன்று படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு ’பொன்னியின் செல்வன் 2’ மற்றும்’ ஜப்பான்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கைதி 2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

’சூது கவ்வும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய நலன் குமாரசாமியின் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இசை அமைக்க சந்தோஷ் நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இசை அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.