close
Choose your channels

அடுத்த கட்டத்திற்கு சென்றது கார்த்தியின் 'காஷ்மோரா'

Monday, June 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'தோழா' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தி நடித்து வந்த அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு பலவிதமான பிரமாண்ட செட்களில் கடந்த சில மாதங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து அடுத்த கட்டமாக விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.
மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment