அடுத்த கட்டத்திற்கு சென்றது கார்த்தியின் 'காஷ்மோரா'

  • IndiaGlitz, [Monday,June 13 2016]

கார்த்தி நடித்த 'தோழா' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தி நடித்து வந்த அடுத்த படமான 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு பலவிதமான பிரமாண்ட செட்களில் கடந்த சில மாதங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து அடுத்த கட்டமாக விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.
மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

More News

விஜய்யுடன் மீண்டும் இணைந்த பிரபல காமெடி நடிகர்

இளையதளபதி விஜய் நடித்த 'ஜில்லா' மற்றும் 'புலி' ஆகிய படங்களில் நடித்த பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையா...

கே.வி.ஆனந்த் பாணியை கடைபிடிக்கும் அறிமுக இயக்குனர்

ஜீவா, கார்த்திகா நடிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய வெற்றிபடமான 'கோ' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் கோலிவுட்டின் பல பிரபல நடிகர், நடிகைகள் நடித்திருப்பார்கள்...

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல பாலிவுட் நடிகை

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றார்...

After back to back super hits, Actor Jayam Ravi is currently busy shooting for 'Bogan' directed by Lakshman and after completing this film he will take up the film to be directed by Vijay...

'கபாலி' இசை விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது...