கார்த்தி-நாகார்ஜுனா படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

'மெட்ராஸ்', 'கொம்பன்' வெற்றி படங்களை அடுத்து கார்த்தி முதன்முதலாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'தோழா' என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு 'தோஸ்த்' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார். ஏற்கனவே 'பையா' மற்றும் 'சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்தி-தமன்னா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். கோபிசுந்தர் இசையில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாரீஸ் உள்பட பல வெளிநாட்டு நகரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

More News

'மை டியர் குட்டிச்சாத்தான்' பாணியில் 'ஸ்ட்ராபெர்ரி 2': பா.விஜய்

கடந்த வாரம் வெளியான "ஸ்ட்ராபெர்ரி' திரைப்படம் ஊடகங்களினால் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்....

'ரெட்' படத்தின் 2வது பாகமா 'தல 56'?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது...

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இயக்குனர் எம்.சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து....

விஷால்-பாண்டியராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

ஒருபுறம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பணியில் நடிகர் விஷால் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் படப்பிடிப்பிலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்...

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தும் 'புலி' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்வதை இன்றைய நாளிதழ் விளம்பரங்கள் உறுதி செய்துள்ளது......