close
Choose your channels

கார்த்தி-நாகார்ஜுனா படத்தின் டைட்டில் அறிவிப்பு

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மெட்ராஸ்', 'கொம்பன்' வெற்றி படங்களை அடுத்து கார்த்தி முதன்முதலாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'தோழா' என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு 'தோஸ்த்' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார். ஏற்கனவே 'பையா' மற்றும் 'சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்தி-தமன்னா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். கோபிசுந்தர் இசையில், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாரீஸ் உள்பட பல வெளிநாட்டு நகரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment