close
Choose your channels

'சூர்யா 43' படத்திற்கு கார்த்தி பட நடிகை தான் நாயகியா? ஆச்சரிய தகவல்..!

Wednesday, January 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

சூர்யா நடிக்க இருக்கும் 43 வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் ஜிவி பிரகாஷுக்கு இந்த படம் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தில் நடித்த அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் பொருத்தமான ஜோடி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment