ஒரே தேதியில் ரிலீஸான மூன்று வெற்றிப்படங்கள்: கார்த்தியின் உணர்வுபூர்வமான டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,April 02 2022]

ஒரே தேதியில் ரிலீஸ் ஆன மூன்று வெற்றி படங்கள் குறித்த உணர்வு பூர்வமான டுவிட் ஒன்றை நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’பையா’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு ரிலீசானது. அதேபோல் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவான ‘கொம்பன்’ திரைப்படம் 2015ஆம் ஆண்டு ரிலீசானது. மேலும் கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான ’சுல்தான்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த மூன்று திரைப்படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகி, மூன்றுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

’பையா’ திரைப்படம் தனக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது என்றும் ‘கொம்பன்’ திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வில்லேஜ் கெட்டப்பில் கொடுத்தது என்றும் ’சுல்தான்’ திரைப்படம் தனக்கு குழந்தைகள் ரசிகர்கள் கிடைக்க காரணமாக இருந்தது என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படங்களின் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.