விஜய் - கார்த்தி சந்திப்பின்போது என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Sunday,July 18 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாகவும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் இதே ஸ்டூடியோவில் கார்த்தி நடித்துவரும் ’சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் தெரிந்ததே.



இதனை அடுத்து ஒரே ஸ்டூடியோவில் அருகருகே உள்ள செட்களில் விஜய் மற்றும் கார்த்தி படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’சர்தார்’ படப்பிடிப்பின் இடையே கார்த்தி அந்த படத்தின் கெட்டப்புடன் விஜய்யை நேரில் சென்று சந்தித்ததாகவும் அப்போது விஜய் அவரை வரவேற்று கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கார்த்தியின் புதிய கெட்டப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்த விஜய், இந்த கெட்டப் சூப்பராக இருக்கிறது என்றும் உங்களுக்கும் உங்கள் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் புதிய சாதனை: தமிழ் சினிமா ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளினார்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளன என்பதும்

சூர்யா-ஜோதிகாவை அடுத்து தடுப்பூசி போட்டு கொண்ட மற்றொரு நட்சத்திர தம்பதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை தோன்ற வாய்ப்பு இருப்பதால்

'வாழ்' பட நாயகி யார் தெரியுமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது

'சந்திரமுகி 2' படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், பி வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி'. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான