பயந்தது போலவே நடந்துவிட்டது: கார்த்தியிடம் பெரியபாண்டி மனைவி கண்ணீர்

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிஜ தீரன் பெரியபாண்டியின் குடும்பத்தினர்களுக்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பெரியபாண்டி ராஜஸ்தான் கிளம்பிய தினத்தில்தான் தான் தீரன் படத்தை பார்த்ததாகவும், அதில் இருந்தே தனது கணவருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்ததாகவும், தான் பயந்தது போலவே நடந்துவிட்டதாகவும் கண்ணீருடன் பெரியபாண்டியின் மனைவி கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கார்த்தி மேலும் கூறியதாவது:

பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா ?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது. அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க , உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது “ என்றார் . உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன். இவ்வாறு நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

More News

நானாக இருந்திருந்தால் காலை உடைத்திருப்பேன்: விமான பாலியல் தொல்லை குறித்து பிரபல நடிகை

சமீபத்தில் அமீர்கானின் 'தங்கல்' படத்தில் நடித்த சைரா வாசிம் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் பயணம் செய்தபோது தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்தவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அழுதுகொண்டே தனது

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு பயம் உள்ளது: சங்கர் மனைவி கவுசல்யா 

உடுமலையில் கவுசல்யாவின் கணவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைத்துள்ள நிலையில் சற்றுமுன் கவுசல்யா செய்தியாளர்களை சந்தித்தார்.

வில்லன் வேடத்தை விஷால் விரும்பியது ஏன்? இயக்குனர் மித்ரன்

விஷால் நடித்து வரும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

பெரியபாண்டி குடும்பத்துக்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு திடீர் மூடல்

ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.