'பாகுபலி'க்கு இணையாகுமா 'காஷ்மோரா'?

  • IndiaGlitz, [Thursday,March 10 2016]

இனிமேல் தமிழ் சினிமாவில் போர்க்காட்சிகள் இடம்பெறுகிறது என்ற செய்தி வெளிவந்தால் உடனே அனைவருக்கும் 'பாகுபலி' போர்க்காட்சிகள் போன்று இருக்குமா? என்ற கேள்விதான் எழும். அந்த அளவுக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி 'பாகுபலி' படத்தில் அமைத்த போர்க்காட்சிகள் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்டது.


இந்நிலையில் கார்த்திக் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'காஷ்மோரா' படத்திலும் ஒரு போர்க்காட்சி இருக்கின்றதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் பெரும் பொருட்செலவில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

இவற்றில் ஒரு போர்க்காட்சியின் படப்பிடிப்பும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த போர்க்காட்சிகள் பாகுபலி'யின் போர்க்காட்சிகளுக்கு இணையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷ் யாதவ், விவேக், சித்தார்த் விபின் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

இன்று பூஜை. நாளை ரிலீஸ். விஜய்சேதுபதியின் லக்கி நாட்கள்

'நானும் ரெளடிதான்', சேதுபதி என இரண்டு ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம்...

இன்று ஒரே நாளில் மூன்று 'வி' நடிகர்கள் படங்களின் பூஜை

இன்று ஒரே நாளில் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை', விஷாலின் 'துப்பறிவாளன்' ஆகிய இரண்டு படங்களின் பூஜை நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட் உத்தரவு

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது....

மிஷ்கின் - விஷால் படத்தின் தலைப்பு

விஷால் நடித்த 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவிருந்த...

'தெறி' விஜய்யின் 'செல்லாக்குட்டி' பாடல் வரிகள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்...