காஷ்மோரா'வுக்கு கார்த்தி-விவேக் கொடுத்த ஒத்துழைப்பு

  • IndiaGlitz, [Monday,May 30 2016]

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி வரும் 'காஷ்மோரா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'இதற்க்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக கார்த்தி உள்பட படக்குழுவினர் அனைவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் குறிப்பாக இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விவேக் அவர்களும் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பிற்கு வந்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்திக் நடித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மிக விரைவில் வெளியாகவிருப்பதாக கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான செட்டுக்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.