close
Choose your channels

கார்த்தியின் 'காஷ்மோரா' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, August 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் இதன் இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 18ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment