கார்த்தியின் 'காஷ்மோரா' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 16 2016]

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் இதன் இறுதிக்கட்ட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 18ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

More News

'பாகுபலி'யின் எந்தெந்த சாதனைகளை 'கபாலி' தகர்த்தது தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலக அளவில் தென்னிந்திய திரையுலகிற்கு பேரும் புகழும் வாங்கித்தந்த திரைப்படம் என்று கூறுவது மிகையாகாது...

ஜோக்கர் இயக்குனரை பாராட்டிய பிரபல அரசியல்வாதி

'குக்கூ' இயக்குனர் ராஜமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து ஊடகங்களிலும் ...

'என்னை காலி பண்ண நினைத்தார்கள்: 'கபாலி' ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் 25 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் இயக்குனர் ரஞ்சித்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு டிரம்ஸ் வாசிக்கின்றார் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி ஹீரோவாகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது எம்.ராஜேஷ்...

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹாட்ரிக் வெற்றி கூட்டணி

சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்று கூறினால் அது மிகையாகாது...