close
Choose your channels

கார்த்தியின் 'காஷ்மோரா' இசை வெளியீடு தேதி என்ன?

Sunday, September 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'காஷ்மோரா' என்றால் அது மிகையாகாது. முதல்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில், முதல்முதலாக நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள கார்த்திக்கு இந்த படம் வேற லெவலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்தி மற்றும் நயன்தாரா ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுடைய காத்திருத்தலுக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது.
ஆம் 'காஷ்மோரா' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதியை வரும் 21ஆம் தேதி படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர். வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment