கார்த்தியின் 'காஷ்மோரா' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 22 2016]

மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தின் திரைக்கு வெளியாகும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தின் பாடல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் அதே தினத்தில் இந்த படத்தின் அட்டகாசமான டிரைலரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

More News

சூர்யா-35 படத்தின் டைட்டில் இதுதான்

சூர்யா-35 படத்தின் டைட்டில் இன்று சரியாக 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

விபத்தில் தந்தையை பறிகொடுத்த 7 வயது சிறுமிக்கு விஷால் உதவி

நடிகர் சங்க செயலாளரும் நடிகருமான விஷால் நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி ஏழை எளிய பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகள்...

விஜய் 61-ல் இணையும் பாகுபலி' ஹீரோ?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இந்த படத்தின் திரைக்கதை...

விஜய்யின் 'கில்லி 2' சாத்தியமா? தரணி பதில்

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது 'கில்லி' படமாகத்தான் இருக்கும்...

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும்...