'தோழா' படத்திற்காக பள்ளிக்கு செல்லும் கார்த்தி

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனன் நடித்துள்ள 'தோழா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழா சென்னை சாந்தோமில் உள்ள St.Bedes School என்ற பள்ளியில் 2500மாணவர்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பள்ளியில்தான் கார்த்தி சிறுவயதில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோழா' படத்திற்காக மீண்டும் தான் படித்த பள்ளிக்கு கார்த்தி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. 'பையா' படத்திற்கு பின்னர் மீண்டும் கார்த்தி, தமன்னா இணையவுள்ள திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆறாது சினம்' படத்தில் ஏழு நாள் மட்டுமே நடித்த ஹீரோயின்

அருள்நிதி நடிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாவது சினம்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில்...

பொதுமக்களுக்கு விஷால் கட்டிக்கொடுத்த 5 கழிப்பிடங்கள்

நடிகர் விஷால் நடித்து வரும் 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இராஜபாளையம் பகுதியில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ரிலீஸூக்கு முன்பே ஜீவா படத்தை பார்த்த 50 பேர்

ஜீவா, ஹன்சிகா, சிபி நடித்த 'போக்கிரி ராஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த ...

'முத்து'க்கு பின் 'கபாலி'க்கு கிடைத்த பெருமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது. இதேபோல்...

அஜித்தை பார்த்தவுடன் 2 நாட்களுக்கு எனக்கு நடிப்பே வரவில்லை : சூரி

கோலிவுட் திரையுலகினர் அஜித்தை ஒரு நடிகராக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. அவரை ஒரு நல்ல மனிதராக பிரமிப்புடன் அனைவரும் பார்த்து வருவது தெரிந்ததே...