கார்த்தியின் கலக்கலான 'விருமன்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் வரும் ‘விருமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கார்த்தி ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘விருமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கார்த்தி, சூர்யா, அதிதி ஷங்கர் ஆகியோர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here it is!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 14, 2022
Dropping the super intense first look poster of #Viruman ??#VirumanFirstLook@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/aZsXcSSyXG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments