எத்தனை எம்ஜிஆர்? கார்த்தி அடுத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்து வரும் 26வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் கார்த்தியின் 26வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று கார்த்தியின் பிறந்தநாளை அடுத்து இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்த்தபடி ’வா வாத்தியாரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதை மக்கள் திலகம் எம்ஜிஆர் சம்பந்தப்பட்டது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது போலவே பர்ஸ்ட்லுக் போஸ்டரில் எம்ஜிஆர் வேடம் போட்ட நட்சத்திரங்கள் உள்ளனர். எத்தனை எம் ஜி ஆர் என்று எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட எம்ஜிஆர் கேரக்டருக்கு நடுவே கார்த்தி அட்டகாசமாக இருக்கும் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி எம் சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Excited to unveil the first look of #Karthi26, titled #VaaVaathiyaar 🔥
— Studio Green (@StudioGreen2) May 25, 2024
A #NalanKumarasamy Entertainer 🎉
A @Music_Santhosh Musical #HBDKarthi #VaaVaathiyaarFirstLook#வாவாத்தியார்#StudioGreen @GnanavelrajaKe @Karthi_Offl @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj @GMSundar_… pic.twitter.com/vLOi3XjLj2
Excited to unveil the first look of #Karthi26, titled #VaaVaathiyaar 🔥
— Studio Green (@StudioGreen2) May 25, 2024
A #NalanKumarasamy Entertainer 🎉
A @Music_Santhosh Musical #HBDKarthi #VaaVaathiyaarFirstLook#வாவாத்தியார்#StudioGreen @GnanavelrajaKe @Karthi_Offl @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj @GMSundar_… pic.twitter.com/vLOi3XjLj2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com