கார்த்தியின் 'தம்பி' படம் குறித்த அடுத்த அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

நடிகர் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’தம்பி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது லுக்கை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக இருக்கும் இந்த செகண்ட் லுக் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசன் நடித்த ’பாபநாசம்’ படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ’96’ படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்ற கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கார்த்தி, ஜோதிகா முதல் முதலில் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று இரண்டாவது லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே இந்த படம் கிறிஸ்துமஸ் பெருவிழா விருந்தாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தீபாவளியன்று விஜய் படத்துடன் மோதிய கார்த்தி படம் மோதிய நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்துடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.