அந்தோணிதாசன் குரலில் வைரலாகும் 'சுல்தான்' சிங்கிள் பாடல்!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

கார்த்தி நடித்து முடித்துள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன

‘சுல்தான்’ படத்தின் டீஸர் மற்றும் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் ‘சுல்தான்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது

’எப்படி இருந்த நாங்க’ என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் கம்போஸ் செய்ய, விவேகா பாடலை எழுத, அந்தோணிதாசன் பாடியுள்ளார். அவருடன் மகாலிங்கம் மற்றும் விவேக் சிவா ஆகியோரும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்

‘சுல்தான்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்த நாளன்று வெளியான வைரல் புகைப்படம்!

“பாகுபலி“ இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்ட பொருட்செலவில் மீண்டும் ஆர்ஆர்ஆர் எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

கமல் விமானத்தில் பறக்கலாம், எல்லாம் பிக்பாஸில் வந்த பணம்: சீமான்

கமல் தாராளமாக விமானத்தில் பறக்கலாம் அவருக்கு பிக்பாஸில் வந்த பணம் இருக்கிறது ஆனால் என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை என்று திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமான்

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் பும்ரா: ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியை

அதிமுகவின் அசத்தும் தேர்தல் அறிக்கை… ஒரே ஷாட்டில் மக்களை கவர்ந்த தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிவித்தார்

அஜித்தின் 'வலிமை' அப்டேட்: போனிகபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்