சண்டையில கிழியாத சட்டையில்லை குமாரு: 'சுல்தான்' சிங்கிள் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ’சுல்தான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

விவேக்-மெர்வின் இசையில் அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா பாடிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். ‘சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு’ என்று தொடங்கும் இந்த பாடல் ஆட்டம் போடும் வகையில் உள்ளது என்பதும் சற்று முன் வெளியான இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ’ரெமோ’ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.