'உள்ளயே இருங்க, அதான் ஊருக்கு நல்லது': வைரலாகும் 'சுல்தான்' படத்தின் டைமிங் வசனம்!

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்த ‘சுல்தான்’ படத்தில் வசனமான ’உள்ளேயே இருங்கள் அதான் ஊருக்கு நல்லது’ என்ற வசனத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அன்றைய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டைமிங் வசனமாக ‘சுல்தான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’உள்ளேயே இருங்கள் அதான் ஊருக்கு நல்லது’ என்ற வசனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’வெளியே கொஞ்சம் வேலை இருக்கு என்று லால் கூறும் போது ’வெளியே வந்து என்ன கிழிக்க போறீங்க, உள்ளே இருங்க அதான் ஊருக்கு நல்லது’ என்று கார்த்தி பேசும் வசனம் இன்றைய காலகட்டத்திற்கு மிகப்பொருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,.

More News

ஓடிடி ரிலீஸிலும் சிக்கல்: சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின என்பதும் அவற்றில் சூர்யாவின் சூரரைப்போற்று,

பாவாடை தாவணியில் 'நம்ம ஊரு பொண்ணு': ஷாலு ஷம்முவின் லேட்டஸ் போட்டோஷூட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'மிஸ்டர் லோக்கல்' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு என்பது தெரிந்ததே.

இருளுக்கு முடிவுண்டு, எங்களுக்கு விடிவுண்டு: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும், அக்கட்சியின் தலைவர்

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்…கூடவே விடுத்த கோரிக்கைகள்?

முதல் முறையாக தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் தகவல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும்