'சர்தார்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு: ரன்னிங் டைம் இவ்வளவு தானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ’சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ’சர்தார்’ படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது ’சர்தார்’ திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில்தான் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படமும் வெளியாக உள்ளது.
மேலும் ’சர்தார்’ படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெரிய நட்சத்திரங்களின் படங்கள் 3 மணி நேரம் என ரன்னிங் டைம் இருந்துவரும் நிலையில் கார்த்தியின் ’சர்தார்’ திரைப்படம் இரண்டரை மணி நேரங்கள் மட்டுமே சரியான அளவில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கார்த்தி பாடிய ’ஏறுமயிலேறி’ என்ற பாடல் இணையதளங்களில் வைரலாகி வருவது ’சர்தார்’ படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது.
Be prepared, #Sardar is coming to blow your mind ??⚡️
— Red Giant Movies (@RedGiantMovies_) October 12, 2022
???? ?????????????? ???????? ????????????. #SardarDeepavali @Karthi_Offl @Prince_Pictures @Udhaystalin @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @kalaignartv_off @SonyMusicSouth pic.twitter.com/a5yiHp7mpX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments