close
Choose your channels

கார்த்தியின் 'சர்தார்' கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எங்கே தெரியுமா? ஆச்சரிய தகவல்!

Saturday, June 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டதாகவும் முதன்முதலாக தமிழ் சினிமாவில் தான் அஜர்பைஜான் நாட்டின் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்த கட்டமாக பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்னும் இரண்டு வாரங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெறும் என்றும் பாண்டிச்சேரியில் தான் இந்த படத்தின் பிரம்மாண்டமான கிளைமாக்ஸ் படமாக்கப்பட உள்ளதாகவும்,. இதனை அடுத்து ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் 2000ஆம் ஆண்டுகளின் நாயகியான நடிகை லைலா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் சுதந்திர தின விடுமுறை தினத்திலும், ’பொன்னியின் செல்வன்’ வரும் செப்டம்பர் 30ஆம் தேதியும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் விரைவில் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment