வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய கார்த்தியின் 'சர்தார்': அதிகாரபூர்வ அறிவிப்பு!

கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு இந்த படத்தின் படத்தயாரிப்பாளர் ஆடம்பர கார் ஒன்றை பரிசாக அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் நல்ல வசூலை செய்து வந்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தி நடித்த ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றதை ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.

More News

நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? கடந்த வாரம் தப்பித்தவர் இந்த வாரம் வெளியேறுவாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்பதும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற

பிக்பாஸில் வேற்றுமொழி பிரச்சனை.. மோகன்லால் எப்படி கையாண்டுள்ளார் பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து போட்டியாளர்கள் வேற்று மொழிகளில் பேசுவது என்ற பிரச்சனை சீசன் 1ல் இருந்து இருந்து வருகிறது. பொதுவாக போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் அதிகமாக பேசி

விக்ரமனுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சியை போட்டியாளரகள் சரியாக புரிந்து கொண்டு விளையாடி வருவதாகவே தெரிகிறது. 

நேற்று கமல்ஹாசனின் 234வது பட அறிவிப்பு.. அப்ப 233வது பட இயக்குனர் யார்?

கமலஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது

'ஆதி புருஷ்' படத்தின் மூன்றாவது ரிலீஸ் தேதி: இதிலாவது ரிலீஸ் ஆகுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.