அஜித்துடன் மோதும் கார்த்தி: தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ என்ற திரைப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் கார்த்தியின் ’சர்தார்’ படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சர்தார்’ . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அஜித்தின் ‘ஏகே 61’ படமும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்துடன் மோத கார்த்தி முடிவு செய்துவிட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வித்தியாசமான இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Happy to reveal the second look from #Sardar. Looking forward to celebrating Diwali with this ambitious project.#SardarFromDiwali2022@Psmithran @RaashiiKhanna_ @rajisha_vijayan @gvprakash #Laila @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @lakku76 @Prince_Pictures pic.twitter.com/QocceennS7
— Actor Karthi (@Karthi_Offl) May 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com