close
Choose your channels

கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, August 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு நாயகி இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மாளவிகா மோகனன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு நடிகை ஆஷிகா ரகுநாத் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு இந்த படத்தில் இணைந்ததை படக்குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

அதர்வா நடித்த ’பட்டத்து அரசன்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ள ஆஷிகா ரகுநாத், தற்போது ’மிஸ் யூ’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் ‘சர்தார் 2’படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் எஸ்ஜே சூர்யா முதல் முதலாக இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment