கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் பாலிவுட் நடிகையா? படப்பிடிப்பு எப்போது?  எங்கே?

  • IndiaGlitz, [Saturday,May 25 2024]

நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’மெய்யழகன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக ’சர்தார்’ படத்தின் இரண்டாம் படத்தில் நடிப்பார் என்று கூறப்படும் நிலையில் அந்த படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன

கடந்த 2022 ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்திற்கான லீடு இருக்கும் நிலையில் தற்போது இந்த ’சர்தார் 2’ படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது

மேலும் இந்த படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதால் ஹிந்தி மார்க்கெட்டிற்கு பாலிவுட் நடிகை இணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்தியின் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான் என்றும், முதல் பாகம் முகமே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபுதேவா - கஜோல்.. 'வெண்ணிலவே' பாடல் இருக்குமா?

27 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து ஒரு படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று 'கார்த்தி 27'.. இன்று 'கார்த்தி 26'.. பிறந்த நாளில் ஒரு சூப்பர் அப்டேட்..!

நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை.. சிம்பு, த்ரிஷாவிடம் பம்பரமாய் வேலை வாங்கும் மணிரத்னம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை மணிரத்னம்

சல்மான்கான் - ஏஆர் முருகதாஸ் படத்தில் முழுக்க முழுக்க தென்னிந்திய நடிகர்களா? யார் யார் தெரியுமா?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 23 'என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சல்மான்கான் படத்தை இயக்கப் போகிறார்

டெரரான வில்லியாக நடித்தவரா இவர்? அருவியில் குடும்பத்தோடு ஆனந்தமாக குளிக்கும் நடிகை..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் டெரரான வில்லியாக நடித்த நடிகை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆனந்தமாக அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும்