'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடிகர் கார்த்தியா? வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2024]

சன் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் குழுவினர்களுடன் நடிகர் கார்த்தி நடித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து சிறப்பு தோற்றத்தில் அவர் இந்த சீரியலில் நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதே இடத்தில் தான் ஜெயம் ரவி நடித்து வரும் ’ஜெனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை அடுத்து சமீபத்தில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் படப்பிடிப்பும் இதே ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி, இன்ப அதிர்ச்சியாக சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றதாகவும் இதை பார்த்து ஆச்சரியமடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிய நிலையில் மரியாதை நிமித்தமாக தான் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு கார்த்தி சென்றதாகவும் அந்த சீரியலில் அவர் நடிக்கவில்லை என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.