கார்த்தியின் 'மெய்யழகன்' ரிலீஸ் தேதி இதுவா? சூர்யாவை முந்திவிட்டாரே..!

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடிப்பில், ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’மெய்யழகன்’. இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ’மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது . ஏற்கனவே ’கங்குவா’ ’அமரன்’ திரைப்படங்கள் ரிலீஸ் தேதிகள் வெளியானதை அடுத்து தற்போது ’மெய்யழகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சூர்யாவுடன் மோதல் இல்லை.. ஆனால் ரஜினியுடன் மோதலா? 'அமரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..

கடந்த சில நாட்களாக சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் ஆகும் அக்டோபர் 10ஆம் தேதி தான் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின்

ஒரே ஒரு வெற்றி.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது

ஊதா ஊதா ஊதாப்பூ.. தளபதி விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை ரம்பா..!

தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'இந்தியன் 2' திரைப்படம் எவ்வளவு நேரம் ட்ரிம் செய்யப்பட்டது.. லைகாவின் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ட்ரிம் செய்யப்பட வேண்டும்

ஒரே இடத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, சூர்யா- ஜோதிகா, மகேஷ்பாபு.. குவியும் கமெண்ட்ஸ்..!

ஒரே புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா,  சூர்யா - ஜோதிகா,  மகேஷ் பாபு - நர்மதா, ஜெனிலியா, பிரித்விராஜ் உள்பட பல பிரபலங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.