கார்த்தியின் 'மெய்யழகன்' ரிலீஸ் தேதி இதுவா? சூர்யாவை முந்திவிட்டாரே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில், ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’மெய்யழகன்’. இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், சரண் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ’மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது . ஏற்கனவே ’கங்குவா’ ’அமரன்’ திரைப்படங்கள் ரிலீஸ் தேதிகள் வெளியானதை அடுத்து தற்போது ’மெய்யழகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
A breezy journey filled with celebratory moments await 🎇
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 17, 2024
Can’t wait for you all to witness the rooted emotions on Sep 27#MeiyazhaganFromSep27#Meiyazhagan@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash… pic.twitter.com/VMwBzRDf8V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com