முதலமைச்சர் மகன் கேரக்டரில் கார்த்தி?
- IndiaGlitz, [Friday,July 27 2018]
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று தெலுங்கில் 'யாத்ரா' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. என்பதும் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகந்நாத ரெட்டியின் கேரக்டரில் நடிக்க பிரபலமான நடிகர் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் கடந்த சில நாட்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஜெகந்நாதரெட்டி கேரக்டரில் நடிக்க நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகியிருப்பதாகவும் மம்முட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது என்றும் ஒருசில ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை கார்த்தியின் தரப்பில் மறுத்துள்ளனர். கார்த்தி தற்போது ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் 'தேவ்' என்ற படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும், 'யாத்ரா' படத்தில் அவர் நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் வதந்தியே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்