ஹிந்தியில் ரீமேக் ஆகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் படம்: அதிகாரப்பூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்துடன் வெளியான போதிலும் ’பிகில்’ படத்திற்கு இணையாக வசூலை குவித்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது.
’கைதி’ திரைப்படம் ஹிந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரீமேக் செய்ய உள்ளதாகவும் இந்த படத்தில் அஜய் தேவ்கான் கார்த்தி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைப் போலவே ஹிந்தியிலும் ’கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to join hands with @RelianceEnt to produce #Kaithi in Hindi. #KaithiInHindi pic.twitter.com/mnrVf3qKeh
— DreamWarriorPictures (@DreamWarriorpic) February 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments