'கைதி' படத்தின் ஆச்சரியமான வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

விஜய் நடித்த பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் கடந்த தீபாவளி தினத்தில் துணிச்சலுடன் வெளியான 'கைதி' படக்குழுவினர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆச்சரியத்தக்க வசூலை பெற்று வருகிறது.

இந்த படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தரகளுக்கும் லாபத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. கட்ந்த ஐந்து நாட்களில் கைதி திரைப்படம் தமிழகத்தீல் மட்டும் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னையின் வசூல் ரூ.1.75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதி திரைப்படம் கேரளாவில் ரூ.2.8 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.4 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.4 கோடியும், ஆந்திராவில் ரூ.7.2 கோடியும், வட இந்தியாவில் ரூ.1.5 கோடியும் வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாட்டில் மட்டும் இந்த படம் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது