விஜய்யின் 'பிகில் படத்துடன் மோதுகிறதா பிரபல நடிகரின் படம்?

  • IndiaGlitz, [Saturday,August 24 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஒருசில திரைப்படங்கள் பின்வாங்கிவிட்டதால் தீபாவளி அன்று 'பிகில் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் நாயகி, டூயட் இல்லாத விறுவிறுப்பான படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே நாளில் அதிலும் திருவிழா நாளில் இரண்டு பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளிவந்தாலும் இரண்டும் வெற்றி பெறும் என்பதை இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் நிரூபித்தது. அதேபோல் பிகில், கைதி என இரண்டு திரைப்படங்கள் வெளியானாலும் இரண்டு வெற்றி பெறும் என்றே கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

More News

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது

பிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி, சிவாஜி பேரன் சிவகுமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார்

ஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்கள் வனிதாவை வெளியேற்றிய பின்னரும், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாளராக அனுமதித்துள்ளது

நமக்கு அமேசானில் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும்: விவேக்

அமேசான் காடுகள் தீயால் கடந்த சில நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீ விபத்து குறித்து உலக நாடுகளின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையை தெரிவித்து வருகின்றனர்.

மூளையில் பிரச்சனை: மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து விலகிய ஸ்மித்!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆசஷ் தொடர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.