கார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 24 2019]

கார்த்தியின் 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கைதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் இல்லாமல் முழுக்க முழுக்க த்ரில், சஸ்பென்ஸ், விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'கைதி' படத்தின் அடுத்த அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டு அதனுடன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார். அதன்படி 'கைதி' படத்தின் டீசர் வரும் 30ஆம் தேதி வியாழனன்று வெளியாகவுள்ளது.

ட்ரீம் வாரியர் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு எடிட்டர்கள் மற்றும் ஆறு ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்கள் வெளியான நிலையில்

மோடியின் சுனாமியில் சிக்காத தமிழகம்: வைரமுத்து

வட இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

பாரதிராஜா படத்தை புரமோஷன் செய்யும் தனுஷ்!

இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்திலும் சசிகுமார் நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'கென்னடி கிளப்'.

சூர்யாவின் பெண் ரசிகைகளுக்கு ஸ்பெஷல் காட்சி: எந்த தியேட்டரில் தெரியுமா?

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த நடிகர்களின் பெண் ரசிகைகளுக்கு என ஒரு ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது.

டாப்சியின் 'கேம் ஓவர்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

நடிகை டாப்சி நடித்து வந்த 'கேம் ஓவர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது