கார்த்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பே ஒரு கொண்டாட்டம் போல் நடந்ததாகவும், இதுவரை ஒரே குடும்பமாக இருந்து பணிபுரிந்துவிட்டு தற்போது பிரியவுள்ளது பெரும் வருத்தத்தை தருவதாகவும் இந்த படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவராகிய செளந்தரராஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.