கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல்முறையாக சூர்யா, கார்த்தி இணைந்துள்ள இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
'பலத்தை காட்டுபவன் பலசாலி இல்லை, பலவீனத்தை காட்டாமல் இருப்பவனே பலசாலி' என்ற பஞ்ச் டயலாக்குடன் டிரைலர் ஆரம்பமாகிறது. இந்த படத்தில் குடும்ப செண்டிமெண்டுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதே அளவுக்கு ஆக்சனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பது டிரைலரில் பாதி நேரம் சண்டைக்காட்சிகள் உள்ளதில் இருந்து தெரிகிறது.
கார்த்தியுடன் பெரும்பாலான காட்சிகளில் சூரியும் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமில்லாத படமாக இருக்கும். 'விவசாயி' என்று பெயருக்கு பின்னர் பெருமையுடன் சொல்லும் ஒரு விவசாயி கேரக்டருக்கு கார்த்தி கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
ஜாதியை வச்சி கட்சி நடத்துறவன், ஜாதியை வச்சு வியாபாரம் செய்பவன், ஜாதி ஒழியணும்ன்னு சொல்லிகிட்டே ஜாதியை வளர்த்துவிடறவன்' என்ற வசனம் நிச்சயம் ஜாதிக்கட்சி தலைவர்களின் மனசாட்சியை குத்தும்
சாயிஷாவின் அழகு, கிராமத்திற்கே உரிமை பசுமை, ரேக்ளா ரேஸ் என டிரைலரை பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது. இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை வரும் அடுத்த வாரம் வெள்ளியன்று பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com