'ஜப்பான்' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபலம்.. கமல்ஹாசன் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ’ஜப்பான்’ படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது இந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் வெளியேறி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜப்பான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக சத்யன் சூரியன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் சத்யம் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரவிவர்மன் சென்று விட்டதால் ’ஜப்பான்’ படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
’ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே தினத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜிகர்தண்டா 2’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தில் அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com